KOLNews

உள்ளூர் மொழிகளின் முக்கியத்துவம்..! - எடுத்துக்காட்டுடன் பதிவிட்ட ராகுல்காந்தி..!

இந்தியாவில் மொழிவாரியாக  மாநிலமாக பிரிக்கப்பட்டிருந்தாலும்,  2க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும்  மாநிலங்களும் உணடு. ஆனால் அவற்றிற்கான முக்கியத்துவம் எந்த அளவிற்கு அளிக்கப்படுகிறது என்பதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எடுத்துக்காட்டுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க நாடெங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தெரிந்ததே..இந்நிலையில், .மஹாராஷ்டிரா மாநிலம் மெல்காட் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தடுப்பூசி மீது சந்தேகம் அடைந்து அதை போட்டுக்கொள்ள தயங்கியுள்ளனர் 

அதையடுத்து உள்ளூர் நிர்வாகம், பழங்குடியினர் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில், அம்மக்கள் பேசும் மொழியான கோரகு மொழியிலேயே தடுப்பூசி குறித்து விளக்கியுள்ளனர் . இதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டனர் . 

இந்நிலையில், இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது டுவிட்டர பக்கத்தில்  பதிவிட்டு, மெல்காட் வனப்பகுதியில் நடந்த நிகழ்வு உள்ளூர மொழியின் சகதியையும் அனைத்து மொழிகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

English Summary

Importance of local languages ..! - Rahul Gandhi posted with an example ..!

Latest Articles

KOLNews