KOLNews

பாலியல் வன்முறை சம்பவங்கள்.! - சட்ட திருத்தும் கொண்டு வர அரசு தயார் என ராஜ்நாத் சிங் அறிவிப்பு..!

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவை உறுப்பினர்கள்,கட்சி பேதமின்றி கண்டனங்களை பதிவு செய்தனர். 

முன்னதாக இந்த சம்பவத்தை எழுப்பி பேசிய காங்கிரஸ் உறுப்பினர் உத்தம் குமார் ரெட்டி, ‘ஐதராபாத்தில் உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மிருகத்தனமான இந்த செயலுக்காக நாம் அனைவரும் தலைகவிழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

Image result for tr baalu

அதே போல், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு, ‘இந்த கொடூர செயலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்த தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கண்டனம் தெரிவித்தார்.

Image result for rajnath singh

உறுப்பினர்களின் கருத்துகளுக்கு பதிலளித்து பேசிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், 

"இதுபோன்ற ஒரு கொடூர சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. இதைவிட பெரிய மனித தன்மையற்ற செயல் என்று எதுவும் இல்லை. இந்த சம்பவத்துக்காக ஒட்டுமொத்த நாடும் வெட்கப்படுகிறது, வேதனைப்படுகிறது.அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. அந்தவகையில் இதற்காக ஒருமனதாக சட்ட திருத்தம் கொண்டுவரவும் அரசு தயாராக இருக்கிறது". என தெரிவித்தார்.

English Summary

Incidents of Sexual Violence.! Rajnath Singh announces that the government is ready to amend the law ..

Latest Articles

KOLNews