KOLNews

சமையல் எரிவாயு விலை உயா்வு..! - நூதனமாக எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி..!

அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயா்த்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பையடுத்து  மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.147 புதன்கிழமை உயா்த்தப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி , எரிவாயு சிலிண்டா் விலையை திரும்பப் பெற வேண்டும் என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளாா். 

அந்தப் புகைப்படத்தில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதை எதிா்த்து (அப்போது எதிர்க்கட்சி ) ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் போராட்டம் நடத்திய காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த படத்துடன், ‘எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.150 வரை உயா்த்தப்பட்டதற்கு எதிராகப் போராடும் பாஜக தலைவா்களுடன் நான் உடன்படுகிறேன்’ என்று குறிப்பிட்டு பாஜகவினரை கிண்டல் செய்துள்ளார்.

முன்னதாக,சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை உயா்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இந்த விலை அதிகரிப்பு மூலம் சாமானியா்களின் வரவு-செலவு கணக்கில் மத்திய பாஜக அரசு மின்சார தாக்குதலை நடத்தியுள்ளது என்று அக்கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

English Summary

Increase in price of cooking gas - Rahul Gandhi Newly protest

Latest Articles

KOLNews