KOLNews

ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 முன்னதாக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆர். எஸ். பாரதி பேசுகையில், பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.. 

அத்துடன். ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் ஆர் எஸ் பாரதி பேசியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான காவலர்கள் ஆர்எஸ் பாரதியை கைது செய்தனர்.

அதனை அடுத்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆர் எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 இதற்கிடையே ஆர்எஸ் பாரதியின் கைதுக்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

English Summary

Interim bail for RS.Bharti

Latest Articles

KOLNews