KOLNews

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதா..? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!

தேர்தல் ஆணையத்தின் தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை ,குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம் -

எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளாட்சித்தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

அ.தி.மு.க. அரசு முழுமையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக் கூட வக்கில்லாமல், திக்குத் தெரியாமல் திணறி, விழி பிதுங்கி நிற்பது வெட்கக் கேடானது.

Image result for edappadi palanisamy

எங்களுக்கு தேர்தலைச் சந்திக்க திராணி இருக்கிறது என வீராவேசம் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பது, மக்களைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சத்தையும் மனநடுக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

Image result for tamil nadu election commissioner

 உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களை  வாங்கியும், முதல்-அமைச்சரும்,மாநில தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இனி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் ஐக்கியப்படுத்திக் கொண்டு, தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது.

மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சியின் ஏவலாளராக மாறி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காலில் போட்டு மிதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்திற்கு விரோதமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இரு மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், ஒரு யூனியனுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்ட கலெக்டர்கள், இரு அல்லது மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என்று நிர்வாக அலங்கோலத்தின் மொத்த உருவமாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, கேவலமானது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும் என்பது அ.தி.மு.க. அரசின் உள்நோக்கமாகவும் ஆசையாகவும் இருந்தாலும், தி.மு.க. ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது.

ஆகவே, அதிகாரம், மாநில தேர்தல் ஆணையம், பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 ரூபாய் வினியோகம் போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும்.

English Summary

Is democracy on the feet? - Mk Stalin's Anger ..!

Latest Articles

KOLNews