KOLNews

தனியார் 'பார்' திறக்க அனுமதியா..? - அண்ணா மன்னிக்கமாட்டார் என்கிறார் அன்புமணி..!

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்ப காலகட்டத்திலிருந்தே புகை மற்றும் மதுவுக்கு எதிரான தங்களது நிலையப்பாட்டை உறுதியாக பதிவு செய்து வருவது தெரிந்ததே..!

இந்நிலையில், மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை மூடிவிட்டு, வேறு இடங்களில் தனியார் மூலம் பார்களை திறக்க திமுக அரசு முயற்சிப்பதாக வரும் தகவல்களை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாமகவின் முக்கிய தலைவர் அன்புமணி ராமதாஸ் . 

அதில், தமிழ்நாட்டின் ஏழைக்குடும்பங்களின் வீழ்ச்சிக்கும்,  பல்லாயிரக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து கைம்பெண்களாக வாடுவதற்கும் முக்கிய காரணம் இந்த மதுக்கடைகள் தான் என்றும், மதுவிலக்குகிற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது தனியார் பார்களை திறக்க முயன்றால் அதனை பாமகவும் தமிழக மக்களும் அனுமதிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 

மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், தொழு நோயாளியின் கைகளில் உள்ள  வெண்ணைக்கு ஒப்பானது,  என திமுகவை நிறுவிய பேரறிஞர் அண்ணா கூறியதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில், தனியார் பார்கள் திறக்க அனுமதிக்கப்பட்டால், அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது என கடுமையாக விமர்சித்துள்ளார்.  அத்துடன், இத்திட்டத்தை கைவிட கூறி தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

English Summary

Is it allowed to open a private 'bar'? - Anna will not forgive..says Anbumani ..!

Latest Articles

KOLNews