KOLNews

திறந்தவெளி தேர்தல் பிரசாரமா ..? - நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!

தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து,  உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன் படி,  அரசியல் கூட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 100 பேருக்கு அதிகமாகவும் நிபந்தனையுடன் ஆட்களை அனுமதிக்கலாம். அதே போல, மூடிய அரங்குகளில் பாதியளவுக்கே, அதிகபட்சம் 200 என்ற அளவிலேயே நபர்களை அனுமதிக்க வேண்டும். திறந்த வெளி என்றால், மைதானத்தின் அளவை பொறுத்து நபர்களை அனுமதிக்கலாம்.

அத்துடன், கூட்டங்களில் பங்கேற்கும் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும்,  உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் அனைத்தும் கட்டாயம் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.மேலும், இது தொடர்பாக மாநிலங்கள், அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு, செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்துக்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

English Summary

Is it an open election campaign? - Federal government has issued guidelines ..!

Latest Articles

KOLNews