KOLNews

தன்னை ஜாதி ரீதியாக விமர்சனம் செய்வது சரியா ? - வருத்தத்தை பகிர்ந்தார் நிர்மலா சீதாராமன்

தமிழ் திரைத்துறையை சார்ந்த இருவர், பொது தளங்களில் தன்னை ஜாதி ரீதியாக  விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வருத்தத்தை திரையுலகினருடன் பகிர்ந்துகொண்டுளார்.

முன்னதாக சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, பேரரசு, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். 

அப்போது, நடைபெறவுள்ள பெப்சி அமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்திற்கான அழைப்பு மற்றும் திரைத்துறை சார்ந்த சில கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

Image result for rk selvamani

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வமணி, 

‛‛திரைத்துறையை சார்ந்த இருவர், பொது தளங்களில் தனது ஜாதியை முன்வைத்து விமர்சனம் செய்வது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருத்தப்பட்டார்.

தயவு செய்து யாரும் இதுபோன்று ஜாதி ரீதியாக பேசாதீர்கள். அரசியலில் தரம்தாழ்ந்த தனிமனித தாக்குதல்கள் கூடாது. குறிப்பாக ஜாதி, மத ரீதியான விமர்சனங்கள், உருவத்தை வைத்து விமர்சனம் செய்வதை கைவிடுங்கள். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்துவிட்ட நீங்கள் எதையாவது பேசிவிட்டு போய்விடுவீர்கள், திரைத்துறையில் இருக்கும் நாங்கள் கஷ்டப்படுகிறோம்", என்றார்.

இந்நிலையில், அமைச்சரை விமர்சித்த அந்த இரண்டு நபர்கள் யார் என்பது குறித்து செல்வமணி நாகரீகம் கருதி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Is it right to criticize oneself racially? - Nirmala Sitharaman shared grief

Latest Articles

KOLNews