KOLNews

 ஸ்டாலின், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா..? - எச்.ராஜா குதர்க்கம்..!

முக்கிய பிரச்சனைகளிலிருந்து மக்களை திசைதிருப்பும் விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில்  பேச பாஜகவால்  வடிவமைக்கப்பட்டவர் என விமர்சிக்கப்படும் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எச்.ராஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"தன்னுடைய ஊழலை மறைக்க, கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற உள் நோக்கம் இருப்பதால்தான், ப.சிதம்பரம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறார். 106 நாள் சிறையிலிருந்த சிதம்பரத்திற்கு மூளை குழம்பியுள்ளது" என தெரிவித்தார்.

மேலும், "தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி. இவர்களின் கூட்டணி அதுவாகவே வீழும். தமிழகத்தை மையமாக வைத்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை, தமிழக அரசு மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தி.மு.க.தலைவர் ஸ்டாலின், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா அல்லது அமைதியாக இருந்து அனுமதிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் இந்தியாவை விட்டு வெளியே போய் விடுங்கள்", என்று கூறினார் எச்.ராஜா.

English Summary

Is Stalin going to support Islamic terrorists? - H.Raja Wicked ..

Latest Articles

KOLNews