KOLNews

இதுவா விவசாயிகளின் நலன் காக்கும் நடவடிக்கை.? - குரல் ஏழுப்பும் அன்புமணி

தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட  விவசாயிகளுக்கு தரப்படும் இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை , என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார் . 

முன்னதாக இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையில் 4.45 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் , 3.17 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ .168.35 கோடி இழப்பீடு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் , ஓர் ரூ .3,783 , ஒரு ஏக்கருக்கு விவசாயிக்கு ரூ .5,313 மட்டுமே இழப்பீடாக கிடைக்கும் . 

இதுவரை வழங்கப்பட்ட ரூ .97.92  கோடி இழப்பீட்டில் 2.24 லட்சம் வழங்கப்பட்ட இழப்பீட்டில் விவசாயிகளுக்கு சராசரியாக ரூ .4,375 மட்டுமே கோடி கிடைத்துள்ளது . 

பல்லாயிரக் கணக்கில் முதலீடு செய்து , மாதக் கணக்கில் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ .3,783 , தனிமனிதருக்கு ரூ .4,375 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம் . இது விவசாயிகளின் துயரத்தை போக்கும் . எந்த வகையிலும் போதுமானதல்ல.  இதுவா விவசாயிகளின் நலன் காக்கும் நடவடிக்கை . 

அவர்களுக்கு இது எந்த வகையிலும் போதுமானது அல்ல . வெள்ளத்தால் மழை , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டால்தான் கடன் சுமையில் இருந்து அவர்கள் மீள்வார்கள் . எனவே , பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ .30 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்", என கேட்டுக்கொண்டுள்ளார் .

English Summary

Is this a measure to protect the interests of farmers? - Anbumani Voice

Latest Articles

KOLNews