KOLNews

தேவையா இந்த அசிங்கம்..? - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி

அரசியலில் மாற்று கருத்து உடையோர்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில், சிலர் எதிர் தரப்பினருக்கு வேறொரு பிம்பத்தை கட்டமைக்கும் விதத்தில் அவர்களுக்கு ஒரு முத்திரை குத்துகிறார்கள். குறிப்பாக சமூக வலைதளவாசிகளிடம் இந்த அருவருக்கத்தக்க கலாச்சாரம் பெருகிவருகிறது. 

எடுத்துக்காட்டாக, பாஜகவை விமர்சிப்பவரை, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கைக்கூலி, தீவிரவாத தொடர்பு உடையவர், திமுகவின் அடிவருடி என முத்திரை குத்துகிறார்கள் பாஜக அனுதாபிகள். 

இந்த போக்கு புதிதல்ல திமுகவினரை விமர்சிப்பவர்களை , 'பெட்டி' வாங்கி விட்டார்..! என உடன்பிறப்புகள் ஒரு காலத்தில் முத்திரை குத்தினார்கள். 

அந்த வகையில் தற்போதும் திமுக எம்.பி ஒருவர் செய்த செயல், அவரையே திருப்பி தாக்கிவிட்டது. அண்மையில் மத்திய அரசு, நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்திருந்த ஒத்த செருப்பு படத்திற்கு  விருது அறிவித்திருந்தது. இதற்கு பலரும் பாராட்டிய நிலையில், திமுக எம்.பி. செந்தில்குமார் “அண்ணனுக்கு பாஜகவுல ஒரு சீட் பார்சல்” என கிண்டலான தொனியில் டுவிட் போட்டிருந்தார்.

ஆனால் அதற்கு பதிலடி தரும் வகையில் பார்த்திபன், அடுக்கடுக்கான டுவிட்டுகளை போட்டு தாக்க, இடையில் புகுந்து நடிகரும் திமுகவின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்ததால், பார்த்திபன் இந்த விவகாரத்தை முடித்துக்கொண்டாதாக தற்போது தெரிவித்துள்ளார்.

ஒருவரின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை, பாஜக விருது கொடுத்து கட்சிக்கு ஆள் பிடிப்பதாக அர்த்தம் கொள்ளும் வகையில் கொச்சைப்படுத்தி பார்க்கும் மனோபாவம் மிக கீழ்தரமானது என்பதை சம்பத்தப்பட்ட கட்சி எம்.பி மட்டுமல்லாமல், அரசியலை விவாதிக்கும் அனைவரும் உணர வேண்டும்.

English Summary

Is this ugly necessary ..? - DMK MP who got scold from Parthiban

Latest Articles

KOLNews