கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன், பரிசோதனை மற்றும் ஆய்வு முடிவுகள் திருப்தியாக இருப்பதால், இந்த மருந்துகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அதையடுத்து, அடுத்த சில தினங்களில் இந்த மருந்துகளைப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணி தேசமெங்கும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரப்பட்டு முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக\ கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையில், மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி அளித்திருப்பது ஆபத்தில் போய் முடியும் என எச்சரித்துள்ள அவர், ‘கோவாக்சின் மருந்துக்கு அனுமதி அளித்தது பற்றி சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளிக்க வேண்டும். முழு பரிசோதனையும் முடியும் வரையில், மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேசமயம் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணியை தொடங்கலாம்’ என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Is vaccination allowed before the full test is completed? - Questioning Sasi Tharoor