KOLNews

சென்னையில்..இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தடியடி..! - இரவிலும் தொடரும் பேச்சுவார்த்தை

சென்னை. இன்று பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக சி.ஏ.ஏ.எனும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்தது.

அப்போது அங்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைக்க முயல்கையில், போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, போலீஸ்  தடியடியில் இறங்கி கூட்டத்தை கலைத்தது. அதன் தொடர்ச்சியாக சிலரை போலீஸ் கைதும் செய்துள்ளது. 

இந்நிலையில், இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், சென்னை,ஆலந்தூர் பகுதியில் பலர் கூடி போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். முதல் கூட்டம் சிறிதாக இருந்த நிலையில் நேரம் ஆக ஆக கோட்டத்தில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனால்  மீனம்பாக்கத்தில் இருந்து கத்திப்பாரா சந்திப்பு வரையிலான பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறை துணை கமிஷனர் பிரபாகரன், போராட்டக்காரர்களை போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக ஒதுங்கி போராட்டத்தில்  ஈடுபடுமாறு  கேட்டுக்கொண்டார். அப்போதும் வாக்குவாதத்தில் சற்று தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே போராட்டம் ஆரம்பித்த பழைய வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை உயர் அதிகாரி  எ.கே.விஸ்வநாதன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், கைது செய்பட்டவர்கள் விவுவிக்கப்பட்டால் மட்டுமே அங்கிருந்து கலைந்து செல்ல முடியும் என போராட்டக்காரர்கள் தெரிவிப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவ்கல்கள் தெரிவிக்கின்றன.

English Summary

Islamist protest in Chennai - Negotiations to continue at night

Latest Articles

KOLNews