இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்றுள்ள நிலையில், அங்கு அவர் பேசியது குறித்து, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அதிபர் வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில், அந்நாட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, அந்நாட்டு அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளி நீதி வழங்குவார் என அமைச்சர் கூறியிருப்பது கேலிக் கூத்தாகும்.

1987இல் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்துகொண்ட உடன்பாட்டை எந்த பிரிவையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. 13ஆவது சட்டத்திருத்தத்தை மதிக்கவும் இல்லை உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டிய வேண்டுமென வற்புறுத்த வேண்டிய இந்தியா, இலங்கை தமிழர்களை அடியோடு கைகழுவி விட்டது என்பதையே, வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு காட்டுகிறது, என தெரிவித்துள்ளார் பழ நெடுமாறன்.
English Summary
It is a joke that the culprit will give justice ..! - Pazha.Nedumaran slams the Indian government..!