நேற்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மாவட்டத்தில் தனது இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், பவானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டங்கள் மக்களுக்கு என்ன பயன் என்றும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் இதே போல கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கினார், அந்த மக்களின் தற்போதைய நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், இதுவரை பெயரிடப்படாத திட்டத்தில் ஊழல் என்று ஆளுநரிடம் மு க ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளதாகவும், அதிமுக அமைச்சர்கள் களி சாப்பிட போகிறார்கள் என்றால், ஸ்டாலின் மட்டும் என்ன பிரியாணியா சாப்பிட போகிறார் என கூறி தொண்டர்களை கலகலப்பூட்டினார்.
மேலும், திமுகவின் முன்னாள் அமைச்சர்கல் மீதான ஊழல் புகார்களை பட்டியலிட்ட முதல்வர், அவை விசாரிக்கப்பட்டு 3 மாதத்தில் தீர்ப்பு வரும் போது யார் சிறை செல்வார்கள் என்பது தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.
English Summary
It will be known who will go to jail when the verdict comes ..! - CM to Stalin