KOLNews

நியாயவிலை கடைகளில் கருப்பட்டி..! - இடத்திற்கு ஏற்ற வாக்குறுதி அளித்த முதல்வர்..!

நியாயவிலை கடைகளில் கருப்பட்டி விநியோகம் செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சார்பில் சாதனையாளர்கள் மற்றும் போராளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாங்காடு அருகே நடைபெற்றது. இதில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார். 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டதுடன், கருப்பட்டியை தானும் பயன்படுத்துவதால், தனக்கு அதன் மருத்துவ பயன்கள் குறித்து நன்றாகவே தெரியும் என்றும் கருப்பட்டி தயாரிப்பவர்களின் கோரிக்கைகயை ஏற்கும் வகையில், பனையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வது குறித்து பரிசீலனை செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு நாடார் சங்கத்தின் ஆதரவளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்

English Summary

Jaggery in Ration shops ..! - Chief Minister who promised to fit the place ..!

Latest Articles

KOLNews