KOLNews

காளையை கட்டும் ஜல்லிக்கட்டும் களைகட்டும் அரசியலும்..! - வருகிறார் ராகுல் காந்தி..!

பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் முக்கியமான ஒன்றான  ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல்காந்தி முதல்கட்டமாக 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி, நாளை மறுநாள் (ஜனவரி 14 ஆம் தேதி) தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்வையிட திட்டமிட்டுள்ளதாகவும்,  அதன் பின்னர் தமிழக தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

அதே நாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி, நட்டாவும் தமிழகம் வருவதாக சொல்லப்படுவது, தமிழக தேர்தல்களத்தை மேலும் சுவாரசியமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

English Summary

Jallikkattu and Politics ..! - Rahul Gandhi is coming ..!

Latest Articles

KOLNews