மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் இன்று (ஜன.,28) திறக்க தடையில்லை என நேற்று,சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை நீதிமன்றம் அறிவித்த பிறகும் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாகவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர்.

அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்திற்கான டெபாசிட் தொகையை செலுத்தியதால் அவரது இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக விளக்கம் அளித்த தமிழக அரசு, மக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை இன்று (ஜன.,28) திறக்கவிருப்பதாக அறிவித்தது.

இதற்கிடையே , தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை வேதா இல்லம் திறக்கப்பட இருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அத்துடன், வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது , ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்\ட்டுள்ளது. அத்துடன், வழக்கு முடியும்வரை பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
English Summary
Jayalalithaa's memorial house ..! - Open, but not allowed to the public ..!