KOLNews

கே.டி.ராகவன் ராஜினாமா..! - நெருக்கடியில் தமிழக பாஜக

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் அரசியல் விவாதங்களில் பாஜக சார்பில் இடம்பெறுபவரும்,  தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும் , வழக்கறிஞருமான கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு , வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இன்று தமிழக அரசியலை உற்றுநோக்கும் அனைவரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. 

இந்த நிலையில் கே.டி.ராகவன், தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். ராகவன் ராஜினாமா இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்க பதிவில் , " தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும் . என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும் . நான் 30 ஆண்டாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன் . இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன் . என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது . இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன் . நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் . குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் . சட்டப்படி சந்திப்பேன் தர்மம் வெல்லும் என அவர் பதிவிட்டுள்ளார் . 

English Summary

KD Raghavan resigns ..! - Tamil Nadu BJP in crisis

Latest Articles

KOLNews