KOLNews

பாஜகவுக்கு தாவினார் குஷ்பு..!

நடிகை குஷ்பூ, 2010-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து, பின் அக்கட்சியிலிருந்து விலகி, 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசில் ,அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருந்த அவர்,  பாஜகவை அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக  ஆங்கில ஊடங்களில் நடைபெறும் 'டாக் ஷோ'க்களில்  இவர் பேசிய பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.   

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக  அவர் பாஜகவில் இணையக்கூடும் என்பதாக தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக   நேற்று மதியம் டெல்லியில் உள்ள பா.ஜனதாவின் தேசிய தலைமை அலுவலகதில்  “நடிகை குஷ்பு பா.ஜனதாவில் இணைகிறார்” என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்வித் பத்ரா முறைப்படி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, நடிகை குஷ்புவுக்கு பூங்கொத்து கொடுத்து, பா.ஜனதா கட்சியின் துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார். உறுப்பினர் அட்டையும் குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் நடிகை குஷ்பு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது அறையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அப்போது குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் பா.ஜனதா அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

English Summary

Khushbu jumps to BJP ..!

Latest Articles

KOLNews