KOLNews

சோனியாவுடன் கே.எஸ்.அழகிரி தில்லியில் திடீர் சந்திப்பு.! - பின்னணி என்ன..?

இன்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.

அண்மையில் நடந்த தமிழக உள்ளாட்சி  தேர்தலில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட உரச லையடுத்து, ஏற்பட்டு இருக்கும் நிலைமை குறித்து சோனியா காந்தியிடம் விளக்கும்  நிலைக்கு  அழகிரி தள்ளப்பட்டாரா ..? என கேள்வியை எழுப்பும் விதமாக இந்த சந்திப்பு உள்ளது.

Image result for vijayadharani

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, காங்கிரஸ் பிரமுகர் விஜயதாரணி, இது ஒரு வழக்கமான சந்திப்பே ..என கூறியுள்ளார்.

மேலும், அண்மையில் நடந்த உள்ளாட்சி கட்சி தரப்பில் கட்சி அடைந்த வெற்றிகள், வெற்றி வாய்ப்பை இழந்த விஷயங்கள் குறித்து விவரிக்கவே கே.எஸ்.அழகிரி சென்றுள்ளார். தற்போது கட்சியின் நிலை குறித்த மறு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.

உட்புசல் காரணமா..?

அண்மையில் கே.எஸ்.அழகிரி திமுக குறித்து தன் அதிருப்தியை வெளியிட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், 

'கட்சியின் மேலிடத்திற்கு தெரியாமல் மாநில தலைவர் எதுவும் தெரிவிக்க மாட்டார். அடிமட்ட தொண்டனின் எதிர்பார்ப்பை அங்கீகரிப்பது ஊரக உள்ளாட்சி தேர்தலே.. அதில் அவர்களை ஆசுவாசப்படுத்த முடியாத ஆதங்கமே அவரின் கருத்து. மற்றபடி இந்த சந்திப்பு வழக்கமான ஒன்று தான்'., என தெரிவித்தார் விஜயதாரணி.

English Summary

KS Alagiri meets with Sonia in Delhi - What's the background?

Latest Articles

KOLNews