KOLNews

தீவீர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ்..!

பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதன் காரணமாக  2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த லாலு பிரசாத்திற்கு உடல்நிலை காரணமாக ஜாமின் வழங்கப்பட்டது. அதன்பின் அவர் டில்லியில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்து எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மற்றொரு கால்நடை தீவன வழக்கிற்காக பாட்னா வந்த அவர், . சி.பி.ஐ, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உடல்நிலைக் காரணமாக ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். அதனை நீதிபதி ஏற்று வக்கீல் மூலமாக தங்கள் தரப்பு வாதங்களை வழங்கலாம் என்றார்.

அதன்பின், கடந்த புதனன்று தனது பாட்னா இல்லத்தில் தான் வாங்கிய முதல் ஜீப்பை தானே இயக்கும்  காட்சியை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவர்  உடனே, விமானம் மூலம் டில்லி அழைத்துச் செல்லப்பட்டு பிற்பகலில் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English Summary

Lalu Prasad Yadav in Intensive Care Unit ..!

Latest Articles

KOLNews