மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பத்தப்பட்ட விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த 13ஆம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டத்தை முன்னெடுத்தனர் அரியானா விவசாயிகள்.
இந்நிலையில், போராட்டம் நடத்த ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமல் ஆங்காங்கே வாகனங்கள் விவசாயிகள் திரண்டு இருப்பதால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி முழுவதும் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதற்கிடையே மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறும்போது "விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். குளிர் காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும்", என்று தெரிவித்தார்
English Summary
Leave the Struggle..Come for Talks..! - Agriculture Minister Narendra Singh Tomar ..!