KOLNews

ரஜினியின் ஆன்மீக அரசியல் கொள்கைகளை பிரச்சாரம் செய்வோம்..! - அர்ஜுன் சம்பத்

சேலத்தில் , இந்து மக்கள் கட்சி தலைவர்அர்ஜுன் சம்பத் கூறியதாவது,

கடந்த 60 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி நடத்தின. தமிழகத்தை சமூகநீதி, பெரியார் பூமி, அண்ணா பூமி என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால், இப்போது கூட , ஊராட்சி தலைவர் ஒருவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தரையில் உட்கார வைத்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

இந்தக் கொடுமை திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் உள்ளது.  இது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமியாக  எப்போது மாறுகிறதோ அப்போதுதான் தீண்டாமை கொடுமைகள் நீங்கும். உத்தரப் பிரதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கணிமொழி குரல் தருகிறார். ஆனால், திண்டுக்கல்லில் தொழிலாளி ஒருவரின் மகள் வன்கொடுமை செய்யப்பட்டு அதற்கு அவர்கள் புகழ் பெற தயாராக இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் கூறிய ஆன்மீக அரசியல் இங்கு ஏற்பட வேண்டும். சாதி மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினியின் ஆன்மிக அரசியல் கொள்கைகளை ஆதரித்து பிரச்சாரம் செய்வோம்,  என தெரிவித்தார்

English Summary

Let's propagate Rajini's spiritual political policies ..! - Arjun Sampath

Latest Articles

KOLNews