KOLNews

இலுப்பை பூவிலிருந்து மதுபானம் .! - ம.பி பாஜக அரசின் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு..!

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஒரு நிகழ்வில் பேசுகையில், இம்மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாராம்பரிய முறைப்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிக்கிறார்கள். புதிய கலால் கொள்கையின்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிப்பது, இனி சட்டவிரோதம் ஆகாது என்றார், அத்துடன், இதுபோல் தயாரிக்கப்படுவதை பாரம்பரிய மதுபானம் என மதுக்கடைகளில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்ள்ளதாகவும்  இதன் வாயிலாக பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

இலுப்பை மலரின் மருத்துவ பயன்கள்! - Iluppai malariṉ maruttuva payaṉkaḷ! |  பெமினா தமிழ்இந்நிலையில், ம.பி.முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அப்படி இருக்கும் நிலையில், இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் மதுவை சட்டபூர்வமாக்கும் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இதை பாஜகவின் தார்மீக வீழ்ச்சியாகவே கருத வேண்டும், தெரிவித்துள்ளார்..என 

English Summary

Liquor from Iluppai flower.! - Congress opposes M.P BJP government's plan ..!

Latest Articles

KOLNews