KOLNews

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல்..! - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி..!

வர இருக்கும் 21ம் தேதி அன்று, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளான நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் , தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

அந்தவகையில், விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று கூறியதுடன்,உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் இருப்பதனால்  பொதுமக்களின் சிறு சிறு பிரச்சனைகளை கூட முன்னெடுக்க முடியாத சூழல் உள்ளது.

சமீபத்திய  நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அமைச்சர் அளித்திருக்கும் உறுதி, மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

English Summary

Local elections next month ..! - Minister Senkottaiyan confirmed ..

Latest Articles

KOLNews