KOLNews

அன்பும் மரியாதையும் போதும் .. சம்பளம் வேண்டாம்..! - கமலுக்கு கங்கனா பதில்..!

அண்மையில் தனது தேர்தல் பறப்புறையின் ஒரு கட்டமாக சில வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டார். அதில் குடும்ப தலைவிக்கு மாதச் சம்பளம் வழங்கும் யோசனையையம் ஒன்றாக முன் வைத்தார். இது இதுவரை எந்த கட்சியும் முன்வைக்காத யோசனை என்பது போக, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமாகவும் பல பெண்ணியவாதிகளால் பார்க்கப்பட்டது.

மநீம யத்தின் இந்த வாக்குறுதி, காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் போன்றவர்களால் கூட வரவேற்கப்பட்டு  தேசிய அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

இந்நிலையில், இது குறித்து மாற்று கருத்து ஒன்றை தெரிவித்துள்ள்ளார்  பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். , 

அதாவது, "எங்களது அன்பான உறவுகளுக்கு பணி செய்வதற்கு, விலை நிர்ணயிக்க வேண்டாம். எங்களுக்கு சொந்தமானவர்களை, நாங்கள் தாயைப் போல கவனித்து கொள்வதற்கு, சம்பளம் அளிக்க  வேண்டாம்.எங்கள் மாளிகையில், நாங்கள் இல்லத்தரசிகளாக இருப்பதற்கு கூலி தேவையில்லை.

அனைத்தையுமே வர்த்தகமாக பார்க்காதீர். எங்களிடம், உங்களை ஒப்படைத்து விடுங்கள். பதிலுக்கு, உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பையும், மரியாதையையும் மட்டுமே" .என தெரிவித்துள்ளார் கங்கனா ரணாவத்.

English Summary

Love and respect is enough .. no need of salary ..! - Kangana responds to Kamal ..!

Latest Articles

KOLNews