KOLNews

'மகா' அரசியல்..! - நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்தது.

அதையடுத்து, நேற்று முன்தினம், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். 

இந்நிலையில், உத்தவ் தாக்கரே, சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டடார். 

அந்தவகையில், முதல் நாளான இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சபை கூடியவுடன், சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இடைக்கால சபாநாயகர் நியமனமும் அரசியலமைப்புகு எதிரானது என்று அவர் குற்றம்சாட்டினார். 

அப்போது சற்று அமளி ஏற்பட்டது. அதையடுத்து,எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி இடைக்கால சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால், அமளியில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்,நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்ததையடுத்து, உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது.

English Summary

'Maha' politics ..! - Uttav Thackeray government win by confidence vote

Latest Articles

KOLNews