KOLNews

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில தேர்தல் கணிப்புகள்..! பாஜகவுக்கு சாதகம்..!

நடைபெற உள்ள மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று ஏபிசி நியூஸ், சி-வோட்டா் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்தும், ஹரியாணாவில் பாஜக தனித்தும்  போட்டியிடுகிறது. ஏற்கனவே இரு மாநிலங்களிலுமே இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

முடிவு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஏபிசி நியூஸ், சி-வோட்டா் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில்  மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக-சிவசேனைஇக்கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். அதை தொடர்ந்து அந்த கூட்டணியே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் . எதிா்க்கட்சி தரப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 76 இடங்கள் வரை கிடைக்கலாம். பிற கட்சிகளுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் கிடைக்க மட்டுமே வாய்ப்பு உள்ளது.

Image result for bjp in maharashtra 2019

அதே போல, 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் முதல்வா் மனோகா் லால் கட்டா் தலைமையில் போட்டியிடும் பாஜக 82 தொகுதிகளில் வெற்றிபெறும். காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், பிற கட்சிகளுக்கு 5 இடங்களுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மற்றொரு கருது கணிப்பை ரிபப்ளிக் தொலைக்காட்சி எடுத்துள்ளது. அதன் படியும் இந்த 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 142 முதல் 147 இடங்களும், கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கு 83 முதல் 85 இடங்களும் கிடைக்கும். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 48 முதல் 52 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், ஹரியாணாவில் பாஜகவுக்கு 58 முதல் 70 இடங்களும், காங்கிரஸுக்கு 12 முதல் 15 தொகுதிகளும், ஜனநாயக் ஜனதா கட்சிக்கு 5 முதல் 8 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

English Summary

Maharashtra and Haryana State Election Polls ..! Benefits for BJP ..!

Latest Articles

KOLNews