KOLNews

மேற்கு வங்க சட்டசபை இடைத்தேர்தல் - 3 தொகுதிகளையும் வென்றது மம்தா கட்சி..!

கடந்த 25-ந் தேதி, மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளுக்கான  சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இந்த 3 தொகுதிகளிலும் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கலியாகஞ்ச், கரக்பூர் சதார், கரீம்பூர் ஆகிய தொகுதிகலீல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  மம்தா பானர்ஜி, இந்த வெற்றி மக்களின் வெற்றி என்றும் பாரதீய ஜனதாவின் அராஜகத்தை மக்கள் நிராகரித்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் “இந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். இது மதச்சார்பின்மை, ஒற்றுமைக்கானது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரானது. பாரதீய ஜனதாவின் அதிகார அராஜகத்துக்கு கிடைத்த பதிலடி” எனவும் அவர் கூறினார்.

மேற்கு வங்காளத்தை போல உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகார் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.அதில் பாரதீய ஜனதா வேட்பாளர் சந்திரபந்த், தன்னை எதிர்த்து களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சு லுந்தியை 3,267 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த தொகுதியை பாரதீய ஜனதா தக்க வைத்துக்கொண்டுள்ளது. 

English Summary

Mamata Party wins 3 seats in West Bengal assembly By-election

Latest Articles

KOLNews