KOLNews

பாஜகவுடன் மல்லுக்கட்டும் மம்தா..! - தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனான சந்திப்பு திருப்தியான முறையில் இருந்ததாகவும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே..

Bengal Election 2021: Rahul Gandhi and Sonia Gandhi Congress should decide  to fight Bengal Election with Mamta Banerjee All India Trinamool Congressஇந்நிலையில், தில்லியில் உள்ள சோனியாவின் இல்லத்துக்குச் சென்ற மம்தா , சுமார் 45 நிமிஷங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார் . அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் உடனிருந்தார் . அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா , "  சோனியா காந்தியுடனான சந்திப்பு சிறந்த , ஆக்கபூர்மான சந்திப்பாக அமைந்ததாகவும், நாட்டில் உள்ள அரசியல் சூழல் , எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் உள்ளிட்டவை குறித்து சோனியா , ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், இது குறித்து அவர்களிடம் இருந்து நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்த மம்தா, அதன் பின்பு தில்லி முதல்வர் கேஜரிவாலையும் சந்தித்தார் 

English Summary

Mamta against BJP ..! - Continued meeting with opposition leaders

Latest Articles

KOLNews