KOLNews

அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம்..! - தாமதமாக ஒரு அங்கீகாரம்..!

ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வந்த திராவிட சித்தாந்த இயக்கங்கள், ஆட்சி கட்டிலில் எரிய பின்னர் பெரியார், அண்ணா, கலைஞர் என தங்களின் சித்தாந்த மூதாதையர்களை சுருக்கி கொண்டதாக, அதே சித்தாந்தத்தின் மீது பற்றுள்ள சிலரிடம் ஒரு வருத்தம் இருந்தது. 

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினின் அரசு, சித்தாந்த முன்னோடிகளில் முதலானவரும், முக்கியமானவருமான அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளது பெரும் மாற்றத்தை எதிர்பார்க்க வைத்துள்ளது. 

அயோதிதாச பண்டிதர் பிறந்த நாள்முதன் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமைக்காகவும், கல்விக்காகவும்  குரல் கொடுத்தவர் அயோத்திதாச பண்டிதர் தான் .  கல்வி மட்டுமே முன்னேற்றத்திற்கான வழி என நம்பிய அவர் , தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு நான்காம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும் என்றும், பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாத நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தவர்.  

மேலும், சாக்கிய முனிவரலாறு , நந்தன் சரித்திர தந்திரம் , பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதி வேதம் , திருவள்ளுவர் வரலாறு , புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியவர்  

TN CM Stalin to kick off free jabs scheme in pvt hospitals on July 28 - The  Weekஅந்த வகையில், வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிதிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், அரைநூற்றாண்டு திராவிட கட்சி ஆட்சிகளில் இது முன்னரே செய்யப்பட்டிருக்கலாமே,? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இதற்கு காரணம் திராவிட சித்தாந்தங்களில் 80களில் ஏற்பட்ட சோர்வு நீங்கி இன்று பல இளைஞர்கள் அது குறித்தான வாசிப்பையும், விவாதங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.  இதில் அயோத்தி தாசர் பண்டிதரை போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்களா ? என்கிற ரீதியிலான விஷயங்கள் அறிவுஜீவிகள் வட்டத்தில் பேசும்பொருளாக மாறியது. 

இந்நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு, அவர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டது போல், , வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் நிலையில், இரவு பகலற்ற ஒளியாக அயோத்தி தாசரின் புகழ் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

English Summary

Manimandapam for Ayodhya Pandit ..! - A Delayed recognition ..!

Latest Articles

KOLNews