தமிழக சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மார்க்சிஸ்ட்டுகள் கூவம் கரையோரம் குடியிருந்த விளிம்பு நிலை மக்களின் துயர் தீர்க்க களம் இறங்கியுள்ளனர்,
ஆமாம் நேற்று, தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை தீவுத்திடலில் கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வகைப்படுத்தி, சென்னைக்கு அப்பால் 40 கிலோமீட்டர் தள்ளி பெரும்பாக்கத்தில் குடியமர்த்தி வருகின்றது.
சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்களை கடந்த ஆண்டு வலுக்கட்டாயமாக காவல் துறையின் உதவியோடு அரசு அப்புறப்படுத்தும் போது அதனை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழுதலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் டி சில்வா ஆகியோர் நேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர் கூவம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள 1.05 ஆறு குடியிருப்புகளில் குடியமர்த்த வலியுறுத்துமாறு மனு அளித்தனர், என்றும், அந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் எதிர் அணியில் இருப்பதால், தாங்கள் முன்னெடுக்கும் பிரச்சனைகளை ஆளும் கட்சி எப்படி அணுகும் என்றெல்லாம் பெரிதாக யோசிக்காமல், கூவம் நதி கரையோரம் குடியிருந்த மக்களின் தற்போதைய தேவையை உணர்ந்து, அவர்கள் துயர் துடைக்க இடதுசாரிகள் முனைத்திருப்பது தேர்தல் அரசியலுக்கு நடுவே பலருக்கு வியப்பை தரலாம்..
ஆனால், கம்யூனிஸ்டுகள் எப்பவுமே அப்படிதான்..!
English Summary
Marxists ..! - These are always .. like that ..!