KOLNews

மீண்டும் தடுக்காவலில் மெகபூபா முப்தி..?

கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதையடுத்து எழும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்கும் விதத்தில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீரிய தலைவர்களை தடுப்புக்காவலில் வைத்தது.

அதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்கள் ஒருவர் ஒருவராக வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கபட்டனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் வகையில் ஒருங்கிணைத்துள்ளனர். 

இந்நிலையில்,   தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மெகபூபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில். 

“நான் மீண்டும் சட்டவிரோதமாக தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக காஷ்மீர் நிர்வாகம் புல்வாமாவில் உள்ள வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க மறுத்து விட்டது. காஷ்மீரின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வர பா.ஜ.க. மந்திரிகளும், அவர்களது கைப்பாவைகளும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் எனக்கு மட்டும் பாதுகாப்பு ஒரு பிரச்சினை ஆகி இருக்கிறது.

அவர்களின் கொடுமைக்கு எல்லையே இல்லை. வாகித் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட எனக்கு அனுமதி இல்லை. என் மகள் இல்திஜா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஏனென்றால் அவரும் வாகித் குடும்பத்தினரை சந்திக்க விரும்பினார்.”

என தெரிவித்துள்ளார்.

English Summary

Mehbooba Mufti in detention again ..?

Latest Articles

KOLNews