KOLNews

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மன்னிக்கமாட்டார்கள்..! - பாஜக - அதிமுக கூட்டணி குறித்து திருமாவளவன்..!

அதிமுகவை பாஜக வுக்கு சரணடைய வைத்திருக்கும்  துரோகச் செயலை  எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்  ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது -  

பாராளுமன்ற தேர்தலை போலவே சட்டமன்ற தேர்தலிலும் பாஜக -அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதல்வர் அறிவிப்பு செய்து இருக்கிறார். அதை முதல்வரும் ஆமோதித்து இருக்கிறார். இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் 

OPS confirms AIADMK and BJP alliance for TN Assembly elections - O  Pannerselvam- Union Home Minister- Amit Shah- visit- Chennai- Assembly  election- Tamilnadu- BJP- AIADMK- L Murugan | Thandoratimes.com |

பாராளுமன்ற தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ, அதைப்போலவே சட்டமன்ற தேர்தல் கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி. தமிழ,  தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றிற்கு தொடர்ந்து எதிராக இருக்கும் ஆட்சி மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி,  தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை திணிப்பது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகள் எல்லாம் வடமாநிலத்தவர்களுக்கு வழங்குவது, தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை தர மறுப்பது. தமிழ்நாட்டின் அதிகாரங்களில் தலையிடுவது என தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்து வரும் துரோகப் பட்டியல் மிகவும் நீளமானது. 

இந்நிலையில், பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பார்க்காமல் போட்டி போட்டுக்கொண்டு ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

5 Things that shaped Jayalalithaa's career in Politics- SheThePeople TV

அதிமுகவை பாஜக வுக்கு சரணடைய வைத்திருக்கும் இந்தத் துரோகச் செயலை அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்களும் மனமார ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டு நலனை அடகு வைத்து மட்டுமின்றி, இப்போது தங்களது கட்சியையும் பாஜகவுக்கு வைத்துவிட்டனர். இந்நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலை போலவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழக மக்கள் இந்தத் துரோகச் செயலுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக் கள்கிறோம்.

English Summary

MGR and Jayalalithaa will not forgive ..! - Thirumavalavan on BJP-AIADMK alliance ..!

Latest Articles

KOLNews