KOLNews

வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர் - முதலமைச்சர் பழனிசாமி பேசியதில் உள்குத்தா..?

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அங்கு அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்ட  முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

அதிமுகவின் கூட்டணி பலம் பொருந்தியது. யாரும் அதனிடம் நெருங்க முடியாது. உள்ளாட்சி, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர்.

அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், எம்.ஜி.ஆரைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது. வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.  பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது.

உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டம் ஆகும்.

என அவர் கூறினார்.

Image result for mgr vs rajini

முன்னதாக இன்று நடிகர் ரஜினி காந்த் தன் இல்லத்தின் முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.  இதனை மனதில் வைத்து தான் எடப்பாடியார் பதிலடி தந்துள்ளார்  என சிலர் கமெண்ட் அடிப்பதை அங்கு காண முடிந்தது.

English Summary

MGR is not an interviewer from home - Indirect hit from Edapadi..?

Latest Articles

KOLNews