KOLNews

அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது..! - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக கோர்ட் உத்தரவு..!

தமிழக மின் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் வருவதாகக் கூறி , 21 பேரிடம் , 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக , கணேஷ்குமார் , தேவசகாயம் , அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர் . 

அதையடுத்து , செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் , மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விலக்கு பெற்றுள்ளார் . இந்நிலையில் , மீதமுள்ள இரு வழக்குகளும் , சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது . 

அப்போது, குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை நெரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் , அவர் ஆஜராகவில்லை . அமைச்சர் என்பதாலும் , ஏற்கனவே திட்டமிடப்பட்ட துறை சார்ந்த கூட்டம் இருப்பதாலும் இன்று ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி , அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது எனக்கூறி விசாரணையை தளளி வைத்தார். அத்துடன், விசாரணை தினத்தன்று கண்டிப்பாக ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார் 

English Summary

Minister can not offer special privilege ..! - Court orders Minister Senthil Balaji to appear ..!

Latest Articles

KOLNews