KOLNews

அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும்..! - 'பகீர்' குற்றச்சாட்டை முன்வைக்கும் ஸ்டாலின்

திமுக எம்எல்ஏ மகனுக்கு குவாரி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில், அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையின் சாராம்சம் - 

கனிமங்கள் வளத்துறை அமைச்சர் திரு சி வி சண்முகத்தால் வானூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு சக்கரபாணியின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ள கல்குவாரியில் குவாரியில் நடைபெற்ற விபத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது கடந்த 3 11 2020 அன்று எம்எல்ஏ சக்கரபாணியின் மகன் பிரபுவின் பெயரில் உள்ள கல்குவாரியில் அண்மையில் நடைபெற்ற கோர விபத்தில் ஆறுமுகம், ரங்கா ராவ் ஆகிய இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் அவர்கள் இருவரில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் இது தொடர்பாக ஆறுமுகத்தின் மகன் அன்பழகன் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட வானூர் காவல் நிலையத்தினர் திருவக்கரை சக்கரபாணி மகன் பிரபு கல்குவாரியில் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனுடைய குவாரி என்பதை மறைத்து பதிவு செய்துள்ளார்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மிரட்டல் காரணமாகவே இப்படி திருவக்கரை பிரபு என்று முதல் தகவல் அறிக்கை போட்டிருக்கிறார்கள்.

கனிமவள துறை அமைச்சருமான திரு சி வி சண்முகம் தனது ஊழல் போக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகனுக்கு கல் குவாரி உரிமம் கொடுத்துள்ளார். ஊழியர்கள் தங்களுக்கு அல்லது தங்களுடைய உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை  எடுக்கக்கூடாது அரசின் காண்ட்ராக்டுகள் மற்றும் குத்தகைகளை பெறக்கூடாது என்பது எல்லோரும் அறிந்த நிலையில்,  அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சிவி சண்முகம் ஊழல் குற்ற நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியவராகிறார். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு சக்கரபாணி தனது மகனுக்கு அரசுகள் குவாரியை குத்தகைக்குப் பெற்று இருப்பதால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.

 எனவே அதிமுக எம்எல்ஏ தெரு சக்கரபாணியின்  மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த லைசென்ஸ் வழங்கிய துறை அமைச்சர் திரு சி வி சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் சம்பத்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  மீது தாமாகவே முன்வந்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன், 

English Summary

Minister CV Shanmugam should resign ..! - Stalin accuses

Latest Articles

KOLNews