நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கமல் தெரிவித்ததன் சாராம்சம் -
தமிழக அரசிடம் ஊழல் மலிந்துள்ளது. அதை மாற்ற வேண்டும்.ஊழலுக்கு எதிரான போராட்டம் என் வாழ்நாள் முழுதும் நடக்கும். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். வாழ்க்கையை முழுக்க எழுதி கொடுப்பதற்கும், கூட்டணி கொத்தடிமையாகவும், மக்கள் நீதி மய்யம் இருக்காது.
விவசாயிகளின் போராட்டத்தை தீர்ப்பதில், ரோம் மன்னர் பிடில் வாசித்தது போல, மத்திய அரசு அலட்சியம் காட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல. நம்மை ஊழல் தாக்கிக் கொண்டிருக்கிறது. அது எங்கிருந்தாலும் மாற வேண்டும். அரசு பொறுப்பில் உள்ளவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் ஊழல் எங்கும் பரவுகிறது; அதை விரைவில் மாற்ற வேண்டும்.
நான் பிரசாரத்திற்கு செல்லும்போது, என் நண்பர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன். அவரது ஆரோக்கியத்தில், அவரது அரசியலை விட, எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பதே என் முதல் எண்ணம். நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்த போது, போட்டியாளர்களாக மட்டுமே இருந்தோம்; பொறாமையாளர்களாக இருந்ததில்லை. அது, அரசியலிலும் தொடரும்.
என தெரிவித்தார் கமல் ஹாசன்.
English Summary
MNM will not be a coalition slave..! - Confirmed by Kamal Haasan