KOLNews

பணம் கொடுத்து முடிச்சாச்சு..! - தேர்தலுக்கு முன்பே வெற்றி களிப்பு..!

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி தமிழக தேர்தல் யுக்திகளை மகாராஷ்டிர அரசியல்வாதிகளும் பின்பற்ற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்துமுடித்தாகிவிட்டது. எனவே வெற்றியடைவது உ றுதி என்று வேட்பாளர் ஒருவர் உற்சாகக் குரலில் பேசும் விடியோ - ஆடியோ ஒன்று அங்கு வைரலாகி வருகிறது.

அங்கு வரும் 21ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பார்தூர் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சராக இருக்கும் பபன்ராவ் லோனிகர் ஜல்னா போட்டியிடுகிறார்.

தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாகப் பேசிய பபன்ராவ் லோனிகர், தேர்தலில் வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து முடித்தாகிவிட்டது என்று தெரிவித்தார்.

இது தொடர்பான விடியோ மற்றும் ஆடியோ என வடமாநில ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில் 

இதன் காரணமாக தேர்தலை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

English Summary

Money distribution over .! - Joy before the election ..

Latest Articles

KOLNews