KOLNews

தேசிய கட்சிகளின் அவசியம்..! - குருமூர்த்தியின் பார்வை சரியானதா..?

அண்மையில் துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழ் நாட்டில் தேசிய வாதம் பேசும் பலரின் பல நாள் ஆதங்கத்தை தானும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவ்விழாவில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் ஆன்மா வித்தியாசமானது. தமிழக அரசியலில் திராவிட -நாத்திக -ஹிந்து விரோத - தேச விரோத அரசியலின் தாக்கம் இருப்பதற்கு காரணமே வேறு மாற்று இல்லாத நிலை. இரு திராவிடக் கட்சிகளில் ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று என்ற அவல நிலை இருக்கிறது. தமிழ்நாட்டு பாரம்பரியத்துக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

AIADMK rakes up Law and Order issues under DMK ahead of elections -  DTNext.in

குருமூர்த்தியின் இந்த கருத்தை நாம் முழுமையாக மறுக்க முடியாது.

 அத்திவரதரை தரிசிக்க சாரைசாரையாக போகும் இதே தமிழ் மக்கள்தான், திராவிட கட்சிகளை ஆட்சிகளிலும் அமர்த்துகிறார்கள். ஆக அவர் சொல்லும் பாரம்பரியத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மைதான்.

 ஆனால், இதை மாற்ற பிஜேபி முயலவண்டும் என அவர் தெரிவித்ததில் தான் நமக்கு முரண்பாடு.

மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பங்கீடு, எல்லை பிரச்சனைகளில்  காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவும் நடுநிலையை எடுக்க முடியாது. இதில் அவர்களை குற்றம் சாட்டுவதை விட கள யதார்த்தம் அதுதான். 

bjp-congress-flag | HW English

பல மொழி பேசும், பல இனக்குழுக்கள் வாழும் இந்தியா போன்ற நாடுகளில் தேசிய கட்சிகளால் இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளில் நடுநிலையான தீர்வுக்கு வழி சொல்லவே முடியாது. அப்படி நியாயமாக நடந்தால் ஒரு மாநிலத்தில் வாக்குகளை இழக்க நேரிடும் என்பது தான் யதார்த்த உண்மை.

இந்நிலையில் மாநில, பிராந்திய கட்சிகள் வளரத்தான் செய்யும், அதற்கான அவசியமும் இருக்கத்தான் செய்யும். அவை தான் மக்களுக்கான உரிமைகளை போராடி பெரும். பிராந்தியக் கட்சிகள் இருப்பதே தேசியத்திற்கு எதிரான ஒன்று என நினைப்பதே ஒரு பெரும் அபத்தம்.  அது கூட்டாட்சித் தத்துவத்தின் மீது உள்ள நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மேலும் திராவிட ,நாத்திக, இந்து விரோத தேச விரோத அரசியலின் தாக்கம் இருப்பதற்கு காரணமே வேற்று மாற்று இல்லாத நிலை என குருமூர்த்தி குறிப்பிடுவதன் மூலம் திராவிட, நாத்திக கருத்துகள் மக்கள் விரோதமான ஒன்றாக அவர் கட்டமைக்க முற்படுகிறார்.

Debate: Theist vs Atheist - Home | Facebook

 ஹிந்து விரோத, அதாவது ஒரு குறிப்பிட்ட மத விரோத, தேசவரோத அரசியல் கூடாது என அவர் கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறது, அதே சமயத்தில் திராவிட நாத்திகக் கருத்துக்கள் மக்களுக்கு எதிரானது என அவர் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?  இறைவழிபாடு, மதம் போன்றவை எப்படி ஒரு நம்பிக்கையோ, அதேபோல் நாத்திகம் கூட ஒரு விதத்தில் நம்பிக்கை சார்ந்தது தான். அதை முன்னெடுக்கவும் பரப்புரை செய்யவும் ஜனநாயகத்தில் உரிமை இருக்க வேண்டும்.

திராவிட கட்சிகள் தேவையில்லை, தேசிய கட்சிகள் வர வேண்டுமென நினைப்பது குருமூர்த்தியின் உரிமை. ஆனால் தேசிய கட்சிகள் ஆண்ட மாநிலங்களைவிட இந்த திராவிட கட்சிகள் ஆண்ட தமிழகம் பல துறைகளிலும் முன்னணியில் திகழ்வதை மத்திய அரசின் தரவுகளே தெரிவிப்பதை குருமூர்த்தி மறந்து விடக்கூடாது.

மேலும், மாநில நலன் சார்ந்து கேட்கப்படும், முன்வைக்கப்படும் கோரிக்கைகளை தேசவிரோதமாக கருதப்படுவது தான் மிகப்பெரிய தேசவிரோதம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

நாம் தேசியக் கட்சிகளை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தேசிய உணர்வை வளர்க்க தேசிய கட்சிகள் அவசியமில்லை. அவற்றை மாநில கட்சிகளாலும் செய்ய முடியும். அதற்கு உதாரணம், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக திரட்டப்படும் 'கொடி நாள்' நிதியில், தமிழகத்தின் பங்களிப்பை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தெரிந்துகொள்ளலாம்.  

English Summary

Need of National Parties..! - Is Gurumurthy's vision correct?

Latest Articles

KOLNews