KOLNews

நீட் தேர்வு ..! - அடுத்த வாக்குறுதியை கையிலெடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

மத்திய அரசு,  மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை அறிமுகப்படுத்திய ஆரம்ப நிலையில் இருந்தே அது குறித்து சர்ச்சை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக நீங்கலாக பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.  மேலும்,மாணவி அனிதாவின் மரணம் போன்ற சம்பவங்கள், நீட் தேர்வு குறித்து மக்களை அதிகளவில் பேசவைத்தன. 

அத்துடன், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, திமுக நீட் தேர்வை நீக்குவதையும் குறிப்பிட்டிருந்தது. 

இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்குரிய நுழைவுத் தேர்வான நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . 

முன்னதாக, இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு என்றும்,  நீட் தேர்வு முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

மேலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் , இதற்கு மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் , அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

முதல்வரின் இந்த அறிவிப்பால்,  நீட் தேர்வு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

English Summary

NEET Exam .! - Chief Minister Stalin take his next promise ..!

Latest Articles

KOLNews