KOLNews

பதவியேற்றார் நிதிஷ்குமார் ..! - விழாவை புறக்‍கணித்தார் தேஜஸ்வி

கடந்த வாரம் நடைபெற்றுமுடிந்த பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் வாக்குகள் கடந்த 10-ம் தேதி  எண்ணப்பட்டன. இதில் முதல்வர்.நிதிஷ்குமார் தலைமையிலான, பா.ஜ.க. கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் நிதிஷ்குமார் அரசு, ஆட்சியை தக்க வைத்தது.

அதையடுத்து, இன்று பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக 7-வது முறையாக பதவியேற்ற்று கொண்டார். குறிப்பாக 4காவது  முறையாக தொடர்ந்து அவர் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த,தர்கீஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர், துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்தார். , இந்த தேர்தல் முடிவுகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களின் வெற்றி சூழ்ச்சியால் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிவரும் நிலையில், அவரது புறக்கணிப்பு புரிந்துகொள்ளக்கூடியதே என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

English Summary

Nitish Kumar takes office ..! - Tejaswi boycotted the ceremony

Latest Articles

KOLNews