KOLNews

முடிவில் மாற்றமில்லை..! - ரஜினிகாந்த்..!

தன் உடல் நிலை குறித்து விரிவாக விளக்கியத்துடன், அதன் காரணமாக, தான் அரசியல் கட்சி துவங்க போவதில்லை என்பதை தெள்ள தெளிவாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு, தொடர்ந்து சில ரசிகர்களால் அன்பு தொல்லை  தரப்படும் நிலையில், அரசியலுக்‍கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டுள்ள அறிக்‍கையில், 

ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருப்பவர்கள், மன்றத்தில் இருந்து நீக்‍கப்பட்டவர்களுடன் இணைந்து, தான் அரசியலுக்கு வருவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியதாகவும், நிகழ்ச்சியை கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு பாராட்டுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும், தலைமையின் உத்தரவையும் மீறி நிகழ்ச்சியை நடத்தியது வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

அத்துடன், தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளதாகவும், அந்த முடிவில் மாற்றம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகும் தன்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்த வேண்டாம் என்றும், தன்னை வேதனைக்‍குள்ளாக்‍க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்‍கை மூலம் தன் ரசிகர்களை கேட்டுக்‍கொண்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த வேண்டுகோள் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வேறு சில வெளிவட்டார அழுத்தங்களுக்கும் சேர்த்து தான் என அரசியல் வல்லுநர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

No change in the decision ..! - Rajinikanth ..!

Latest Articles

KOLNews