KOLNews

கூட்டணியில் குழப்பம் இல்லை..! - அண்ணாமலை உறுதி .!

திருச்சி மாவட்டம் வயலூரில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 9வது  பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே அண்ணாமலை, ஒத்தக்கடையில் உள்ள மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது - 

 பாஜக அதிமுக கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் குழப்பமும் இல்லை. தெளிவான பார்வையில், நேர்கோட்டில் தான் உள்ளோம். கொள்கை ரீதியாக அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக இணைந்து பயணம் செய்து கொண்டுள்ளோம். திமுகவினர் குடும்ப அரசியல் உட்பட அனைத்து விஷயங்களிலும் மிதமிஞ்சி உள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிடும் அளவுக்கு  பலம் இல்லாமல் இல்லை. வேகமாக வளர்ந்து வருகிறது. பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா ? கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்சி கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா ? என்பதை கட்சித் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார். 

English Summary

No confusion in the alliance ..! - Annamalai confirmed.!

Latest Articles

KOLNews