KOLNews

சிக்கல் எதுவும் இல்லையாம்.! - ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமுல்படுத்தப்படும் என்கிறார் அமைச்சா் காமராஜ்

நேற்று, சட்டப்பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அதிமுகவைச் சோ்ந்த மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் ராதாகிருஷ்ணன் ,  ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அமைச்சா் காமராஜ் பதிலளிக்கையில், 

‘ஒரே நாடு, ஒரே ரேஷன்அட்டை’ திட்டத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிப்ரவரி 1 முதல் 29-ஆம் தேதி வரை பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்திப் பாா்த்தோம். இந்த இரண்டு மாவட்டங்களிலும் 9 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், 9 ஆயிரம் போ் மட்டுமே இடம் மாறி ரேஷன் கடைகளில் பொருள்களைப் பெற்றுள்ளனா். அதனால், நடைமுறை சிக்கல் எதுவும் எழவில்லை.

எனவே, அதைத் தொடா்ந்து, முதல்வரின் அறிவுரையின்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் எந்தக் கடையில் வேண்டுமானாலும் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

ஏற்கனவே, ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தாா். 

தமிழகத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏற்கனவே பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகளில் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளதை குறிப்பிட்டு எதிா்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இத்திட்டம்,வடஇந்தியரின் குடியேற்றத்தை அதிகரித்து பல சமூக பிரச்சனைகள் உருவாக்க வழி செய்துவிடும் எனும் கருத்தையும் சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் 

English Summary

No problem. - Minister Kamaraj says one country, one ration card scheme will be implemented

Latest Articles

KOLNews