KOLNews

எந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை ..! - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்

கொரோனா நோய்த்தொற்றின் (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக நிதி பெறும் நோக்கில் அவசர கால நிதியை பிரதமா் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை ஏற்படுத்தினார். 

அதையடுத்து, தோழியாதிபர்களும், வணிக நிறுவனங்களும், திரைத்துறையினரம், இன்ன பிற பிரபலங்களும், நிதி அளித்து வருகின்றனர்.  அதே போல சாமானியர்களும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமரின் இந்த முயற்சியை காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிர மாநில அமைச்சருமான பிருத்விராஜ் சவாண் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில்,

'நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்போது, எந்தவொரு உலகத் தலைவரும் அதிபரின் சலுகைத் திட்டம் என்றோ பிரதமரின் சலுகைத் திட்டம் என்றோ அறிவித்ததில்லை. இந்திய அரசு அறிவித்த சலுகைத் திட்டங்கள் மட்டுமே ‘பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் திட்டம் (பிஎம் கரீப் கல்யாண் யோஜனா)’ என்று பெயரிடப்பட்டது.

எந்தவொரு சுயவிளம்பரம் தேடிக் கொள்வதற்கான வாய்ப்பையும் பிரதமா் மோடி தவறவிடுவதில்லை. 1948-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு,பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயா்ந்த அகதிகளுக்காக தேசிய மீட்பு நிதியை உருவாக்கினாா். அதற்குப் பிறகு எந்தவொரு பிரதமரும் மற்றொரு மீட்பு நிதியை உருவாக்க முனைந்ததில்லை. தற்போது புதிய நிதியை உருவாக்கியிருக்கும் பிரதமா் மோடியின் நடவடிக்கையும் சுயவிளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும்' ,

என்று பிருத்விராஜ் சவாண் குறிப்பிட்டுள்ளாா்.

English Summary

No world leader is acted like Modi ..! - Congress criticizing the Prime Minister

Latest Articles

KOLNews