KOLNews

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது..! - மத்திய அமைச்சரிடம் வைகோ கோரிக்கை..!

தமிழகத்தில் உள்ள விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் கொண்டு செல்ல எதுவாக குழாய்கள் பாதிக்கும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பவே அந்த செயல்பாடுகள் சற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அத்திட்டங்கள் இன்னும் கைவிடப்படவில்லை. 

விவசாயிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் , இது போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பான சூழலே உள்ளது.

இந்நிலையில் நேற்று, இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் மதிமுகவின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, மற்றும் ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தியும் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் விளைநிலங்களில் பெட்ரோலியம் எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது; நெடுஞ்சாலைகளை ஒட்டியே கொண்டு செல்ல வேண்டும் என அவ்மனுவில் கோரிக்கை விடுதிருப்பதாக தெரிகிறது.

இந்த விண்ணப்பத்தில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சுப்பராயன் மற்றும், நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.சின்ராஜும் கையெழுத்து இட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Oil pipes should not be planted in the fields ..! - Vaiko requests the Union Minister

Latest Articles

KOLNews