KOLNews

பீகார் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார்..! - நாளை பதவி ஏற்கிறார்..!

ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவர் நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக  மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கூட்டணியில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்றதன் மூலம்  ஐக்கிய ஜனதாதள கட்சியை விட  அதிக இடங்களை பிடித்த  கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வென்றது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் .நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாட்னாவில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமாரை முதலமைச்சராக்குவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 7வது முறையாக நிதிஷ்குமார் பொறுப்பேற்க உள்ளார். 

இதன் மூலம் நான்காவது முறையாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் பெருமையை பெற்றுள்ள நிதிஷ் குமார் பாட்னாவில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

English Summary

Once again Nitish Kumar as Bihar Chief Minister - Takes office tomorrow ..!

Latest Articles

KOLNews