KOLNews

நூலகங்களில் திமுக ஆதரவு ஏடுகள் மட்டுமா..? நியாயமற்ற செயல்..! என ராமதால் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளான முரசொலி , தினகரன் ஏடுகளை மட்டும் வாங்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பது , நியாயமற்ற செயல் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் . 

முன்னதாக இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள , அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி , தினகரன் குங்குமம் , தமிழ்முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும் , அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிட்டு இருப்பது நியாயமற்றது என சாடியுள்ளார்.

அத்துடன், நாளிதழ்களுக்கான சந்தா , விளம்பரங்களில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களுக்கு அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

English Summary

Only DMK support leaflets in libraries ..? Unfair action ..! As accused by Ramadoss

Latest Articles

KOLNews